பூச்சி கடித்தால் - எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும். தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். புட்டிப்பாலில் சர்க்கரை கலந்து குழந்தைக்குக் கொடுக்கும்போது, அதில் சில சொட்டுகள் வாய் ஓரத்தில் ஒழுகியிருக்கும். சர்க்கரை வாசனைக்கு வரும் எறும்பு கடித்துவிடும். அப்போது குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமை ஏற்பட்டுச் சிவந்த தடிப்புகள் ஏற்படலாம். தொடர்ந்து அழும் குழந்தைக்கு நீண்ட கால பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாது. ஆனால் பெற்றோர்களுக்கு மன உளைச்சல் அதிகமாகலாம். குழந்தையை அமைதிப்படுத்த உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டீர்களேயானால் அதற்கு மேல் நீங்கள் செய்யக் கூடியது இதுதான். குழந்தை தனது தேவையை உங்களுக்கு தெரிவிக்க ஒவ்வொரு நாளும் புதிய வழிகளை கற்கிறது என்பதையும், இந்த அழுகைக் கட்டம் ஒரு நாள் நிற்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.