“நீங்கள் செய்வது தவறு. உங்க மனைவியின் உடல்நிலை வேறு, மகனின் உடல்நிலை வேறு. உங்கள் மகன் மிகவும் சீரியஸ் கண்டிஷனில் இருக்கிறார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்” என்று கோபத்துடன் சொன்னேன். ஆனால், தாமதமாக அவர்கள் மகனை மருத்துவமனையில் சேர்க்கும் போது காலம் கடந்துவிட்டிருந்தது. தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். அலட்சியம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. இந்த அலட்சியத்துக்கு காரணம் அறியாமை. முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாத தீவிர ஆஸ்துமா நோயாளிக்கு பூரண ஆயுசு’ என்பதும் நிச்சயம் கிடையாது
உலக அளவில் மிகவும் குறைவாகவே அடையாளம் காணப்படும், சரியாக சிகிச்சையளிக்கப்படாத நோய் ஆஸ்துமா என்கின்றனர் நிபுணர்கள்.
அப்படியென்றால் ஆஸ்துமாவின் உண்மையான பாதிப்புகள் எப்படி இருக்கும்? இந்த நோயின் தன்மை, பாதிப்பு, வெளிப்பாடு இவற்றைக் கண்டறிவது எப்படி? என்னென்ன சிகிச்சைகள்?.....அடுத்த வாரம் பார்ப்போம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.