Wednesday, 16 September 2015

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru Peyarchi Rasi Palan in Tamil

இதுநாள் வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குரு பகவான் 6ம் இடமாகிய ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ருணம் என்றால் கடன். ரோகம் என்றால் வியாதி. உங்கள் ராசியாதிபதி குரு 6ல் சஞ்சரிப்பதால் உங்களில் சிலருக்கு திடீரென்று ஆரோக்கியம் பாதிக்கப் படும். உடல் உபாதையால் உபத்திரவம் ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவால் கடன் வாங்கும் நிலையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் சிக்கலும், வீண் வரோதமும் ஏற்படும். குழந்தைகளுக்கு அடிக்கடி கீழே விழுந்து அடிபடும் நிலையும் அதனால் உடலில் காயங்களும் ஏற்படும். எனவே குழந்தைகள் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். ஆயினும் குரு பகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும்ää குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற சொல்லுக்கு ஏற்ப குரு பகவான் தன் பார்வை பலத்தால் உங்களுக்கு அதிக நன்மைகளை வழங்கி உள்ளார். ஜீவன ஸ்தானம் என்னும் 10ம் இடம் விரைய பாவம் எனும் 12ம் இடம் தன குடும்ப ஸ்தானம் எனும் 2ம் இடம் ஆகிய பாவங்களை பார்வை செய்வதால் உங்களுக்கு நற்பலன்களை அதிகம் வழங்க உள்ளார். சிம்ம குருவால் புதிதாக தொழில் தொடங்க முயற்சி செய்பவர்களுக்கு நல்ல தொழில் அமையும். பாங்கிங், சர்வீஸ் கமிஷன் எழுதுபவர்களுக்கு வேலை வாய்ப்பு கூடி வரும். குறிப்பாக பாங்க், கருவூலம், வட்டி தொழில் ஆகிய துறையில் உள்ளவர்களுக்கும் ஆசிரியர், புரோகிதம் ஆகிய துறையை சார்ந்தவர்களுக்கும் அதிக நன்மை ஏற்படும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.