இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பூக்கள் அதிகளவு ஏற்றுமதி ஆகின்றன. இப்போது எல்லா விழாக்களிலும் பொக்கே கொடுப்பது வழக்கமாகிவிட்டது.
பூ அலங்காரத் தொழிலும் வளர்ந்துவருகிறது. தோட்டக்கலை படிப்பவர்கள் சொந்தமாக அலங்காரப் பூக்கள் மற்றும் காய்கறி உற்பத்தி செய்யலாம். நர்சரி கார்டன் வைக்கலாம். பொக்கே தொழிலும் செய்யலாம். வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் துறை இது. ஒவ்வொரு வங்கியிலும் விவசாய அலுவலர் என்று ஒருவர் இருப்பார். அந்த வேலை கிடைக்கும். ஆராய்ச்சியாளர் ஆகலாம். இன்னும் தோட்டக்கலை சார்ந்த அனைத்து அரசு மற்றும் தனியார் துறைகளிலும் வேலை கிடைக்கும். தனியாகவும் தொழில் தொடங்கலாம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.