அரிசி மற்றும் பருப்புகள், வெந்தயம் ஆகியவற்றை 3-4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
ஊற வைத்துள்ள பொருட்களை தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளாகாய் சேர்த்து வதக்கவும்.
சூடு ஆறியதும் தாளித்த பொருட்களை மாவில் கொட்டி கலக்கி உடனே பணியாரம் ஊற்றலாம்.
பணியாரத்துடன் சாப்பிட தேங்காய் சட்னி, தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.