Wednesday, 16 September 2015

அன்னை தெரேசா | Mother Teresa Details in Tamil

இவர்கள் அன்னை தெரேசாவின் உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் எனவும் குற்றம் சாட்டினர். சில செய்தி ஊடகங்கள் அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பியும் செய்திகளை வெளியிட்டன.

மின்சாரத்தில் அலட்சியமா | Dont Take Electricity For Granted

·          இடி அல்லது மின்னலின்போது வெட்டவெளியில் இருக்காதீர்கள். இடி அல்லது மின்னலின்போது உடனடியாக கான்கிரிட் கூரையிலான பெரிய கட்டிடம் வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையுங்கள். இடி அல்லது மின்னலின்போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ, தஞ்சம் அடைய வேண்டாம்.
·         இடி அல்லது மின்னலின்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகலுங்கள். தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில், மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள். திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

·         இடி அல்லது மின்னலின்போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru Peyarchi Rasi Palan in Tamil

இதுநாள் வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குரு பகவான் 6ம் இடமாகிய ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ருணம் என்றால் கடன். ரோகம் என்றால் வியாதி. உங்கள் ராசியாதிபதி குரு 6ல் சஞ்சரிப்பதால் உங்களில் சிலருக்கு திடீரென்று ஆரோக்கியம் பாதிக்கப் படும். உடல் உபாதையால் உபத்திரவம் ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவால் கடன் வாங்கும் நிலையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் சிக்கலும், வீண் வரோதமும் ஏற்படும். குழந்தைகளுக்கு அடிக்கடி கீழே விழுந்து அடிபடும் நிலையும் அதனால் உடலில் காயங்களும் ஏற்படும். எனவே குழந்தைகள் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். ஆயினும் குரு பகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும்ää குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற சொல்லுக்கு ஏற்ப குரு பகவான் தன் பார்வை பலத்தால் உங்களுக்கு அதிக நன்மைகளை வழங்கி உள்ளார். ஜீவன ஸ்தானம் என்னும் 10ம் இடம் விரைய பாவம் எனும் 12ம் இடம் தன குடும்ப ஸ்தானம் எனும் 2ம் இடம் ஆகிய பாவங்களை பார்வை செய்வதால் உங்களுக்கு நற்பலன்களை அதிகம் வழங்க உள்ளார். சிம்ம குருவால் புதிதாக தொழில் தொடங்க முயற்சி செய்பவர்களுக்கு நல்ல தொழில் அமையும். பாங்கிங், சர்வீஸ் கமிஷன் எழுதுபவர்களுக்கு வேலை வாய்ப்பு கூடி வரும். குறிப்பாக பாங்க், கருவூலம், வட்டி தொழில் ஆகிய துறையில் உள்ளவர்களுக்கும் ஆசிரியர், புரோகிதம் ஆகிய துறையை சார்ந்தவர்களுக்கும் அதிக நன்மை ஏற்படும்.

முதுமையும் தனிமையும் இனிமையே | Articles Old Age

·         உணவு முறைகளில் வயதுக்கேற்ப மாற்றம் தேவை. வயது கூடும்போது ருசி மாறும், பசி குறையும், உண்ணும் உணவின் அளவும் மாறுபடும். காலையில் அதிகமாகவும், பகலில் மிதமாகவும், இரவில் குறைவாகவும் உணவு உண்ணவேண்டும்.
·         வழவழப்பான தரை, பாத்ரூமில் ஈரமான தரை, மார்பிள் தளம் போன்றவற்றால் நிலை தடுமாறி விழும் நிலை தோன்றலாம். டெலிபோன் அழைப்புக்குக் கூட வேகமாகச் செல்லாமல் நிதானம் கடைப்பிடிப்பது நல்லது.
·         மன சந்தோஷத்துக்கு நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கலாம்.
·         உறவுகள் கைவிட்டால் துவண்டு போகாதீர்கள். நல்ல, புதிய நண்பர்களையும் உறவுகளையும் உருவாக்கி கொள்ளுங்கள். உலகம் மிகப் பெரியது என்பதை உணருங்கள்.

·         50 வயது ஆன உடனேயே ஓய்வுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். அதன்படி ஓய்வு காலத்தை கழிக்க வேண்டும்.