·        
 இடி
அல்லது
மின்னலின்போது வெட்டவெளியில் இருக்காதீர்கள். இடி அல்லது மின்னலின்போது உடனடியாக கான்கிரிட் கூரையிலான பெரிய கட்டிடம் வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையுங்கள். இடி அல்லது மின்னலின்போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ, தஞ்சம் அடைய வேண்டாம்.
·        
இடி
அல்லது மின்னலின்போது தண்ணீர்
தேங்கியுள்ள பகுதிகளை விட்டு
அகலுங்கள். தஞ்சம் அடைய
அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில், மின்
கம்பிகள், மின் கம்பங்கள்,
மரங்கள், உலோக கம்பி
வேலி போன்றவை இல்லாத
தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள். திறந்த
நிலையில் உள்ள ஜன்னல்,
கதவு போன்றவற்றின் அருகில்
இருப்பதை தவிர்ப்பது நல்லது.
·        
இடி
அல்லது மின்னலின்போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர்,
கணினி மற்றும் தொலைபேசி
போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.