இன்றைய பெரும்பாலான இளைஞர்களிடம் உங்களுக்கு முதுகுவலி இருக்கிறதா என்று கேட்டால் ஆம் என்பதே அதிக பதிலாக இருக்கிறது. இதற்கு 10 மணி நேரத்திற்கு மேல் ஒர் இடத்திலேயே உட்கார்ந்து வேலை பார்ப்பது, அதிக எடை தூக்குவது, உணவு பழக்கம், மாறிவரும் வாழ்க்கைமுறை, வேலை பளூ, மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் சொல்லலாம். முதுகை கழுத்துப் பகுதி, நடுமுதுகுப் பகுதி, அடிமுதுகுப் பகுதி, வால் பகுதி என்று நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்.