Showing posts with label old age health tips in tamil. Show all posts
Showing posts with label old age health tips in tamil. Show all posts

Wednesday, 16 September 2015

முதுமையும் தனிமையும் இனிமையே | Articles Old Age

·         உணவு முறைகளில் வயதுக்கேற்ப மாற்றம் தேவை. வயது கூடும்போது ருசி மாறும், பசி குறையும், உண்ணும் உணவின் அளவும் மாறுபடும். காலையில் அதிகமாகவும், பகலில் மிதமாகவும், இரவில் குறைவாகவும் உணவு உண்ணவேண்டும்.
·         வழவழப்பான தரை, பாத்ரூமில் ஈரமான தரை, மார்பிள் தளம் போன்றவற்றால் நிலை தடுமாறி விழும் நிலை தோன்றலாம். டெலிபோன் அழைப்புக்குக் கூட வேகமாகச் செல்லாமல் நிதானம் கடைப்பிடிப்பது நல்லது.
·         மன சந்தோஷத்துக்கு நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கலாம்.
·         உறவுகள் கைவிட்டால் துவண்டு போகாதீர்கள். நல்ல, புதிய நண்பர்களையும் உறவுகளையும் உருவாக்கி கொள்ளுங்கள். உலகம் மிகப் பெரியது என்பதை உணருங்கள்.

·         50 வயது ஆன உடனேயே ஓய்வுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். அதன்படி ஓய்வு காலத்தை கழிக்க வேண்டும்.